sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., வேட்பாளருக்கு ஓட்டளிக்காதீர்கள் சொல்வதும் காங்கிரஸ் கட்சி தான்!

/

காங்., வேட்பாளருக்கு ஓட்டளிக்காதீர்கள் சொல்வதும் காங்கிரஸ் கட்சி தான்!

காங்., வேட்பாளருக்கு ஓட்டளிக்காதீர்கள் சொல்வதும் காங்கிரஸ் கட்சி தான்!

காங்., வேட்பாளருக்கு ஓட்டளிக்காதீர்கள் சொல்வதும் காங்கிரஸ் கட்சி தான்!


ADDED : ஏப் 24, 2024 11:31 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்ஸ்வாரா: ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியே பிரசாரம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பஜன்லால் ஷர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், 12 தொகுதிகளுககு முதற்கட்டமாக கடந்த 19ல் ஓட்டுப்பதிவு முடிந்தது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பன்ஸ்வாரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அரவிந்த் தாமோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, அங்குள்ள பாரத் ஆதிவாசி கட்சியுடன் காங்., கூட்டணி அமைத்தது. இதை தொடர்ந்து, இரு கட்சிகளும் இணைந்து ராஜ்குமார் ரோட் என்பவரை வேட்பாளராக அறிவித்தன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரவிந்த் தாமோரை விலகச் சொல்லி காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியும், அவர் வேட்புமனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

இதனால், அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது உறுதியானது. இது காங்கிரஸ் மற்றும் பாரத் ஆதிவாசி கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராஜ்குமாருக்கு ஆதரவு தெரிவித்த மாநில காங்கிரஸ், தலைமையின் உத்தரவை மீறி தேர்தலில் போட்டியிடும் அரவிந்த் தாமோருக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பிரசாரம் மேற்கொண்டது.

பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த சிலரின் ஆதரவு தனக்கு உள்ளதாக கூறி வரும் அரவிந்த் தாமோர் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறி வருகிறார்.

ஆனால், ஆதிவாசி கட்சியினரின் ஆதரவு தனக்கே உள்ளதாக ராஜ்குமாரும் தெரிவித்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த மகேந்திர சிங் மால்வியா அங்கு இருவருக்கும் எதிராக களமிறங்கியுள்ளார்.

மும்முனை போட்டி நிலவும் சூழலில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கும் கட்சிக்கு எங்கள் ஓட்டு என பஸ்வாரா தொகுதி மக்கள் கூறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us