UPDATED : ஆக 27, 2024 08:24 PM
ADDED : ஆக 27, 2024 08:19 PM

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. அவர் 3வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.
இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். வரும் டிசம்பர் 1 முதல் ஆரம்பம் ஆகும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐ.சிசி தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இன்று வெளியான அறிவிப்பில் ஐ.சி.சி., தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் வரும் டிச.01 ம்தேதி பதவியேற்க உள்ளார். இதன் மூலம் 35 வயதில், அவர் ஐ.சி.சி., வரலாற்றில் இளம் வயது தலைவராக ஜெய்ஷா தேர்வு பெற்றார்.
முன்னதாக இப்பதவியில் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் மனோகர் ஆகியோர் ஐ.சி.சி.,யின் தலைவராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.