ADDED : செப் 15, 2024 11:11 PM

பெங்களூரு: சிறையில் கூடுதல் சலுகை கேட்டு தகராறு செய்யும், நடிகர் தர்ஷனை ஜெயிலர் எச்சரித்துள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைதாகி, பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தது போன்று, பல்லாரியிலும், சிறப்பு சலுகைகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறார். சிறை ஊழியர்களுடன் அவ்வப்போது வாக்குவாதம் செய்கிறார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள ஜெயிலர், நடிகர் தர்ஷனை எச்சரித்துள்ளார். 'நீங்கள் இது போன்று, நடந்து கொள்வதையும், பிடிவாதம் பிடிப்பதையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
'சிறைக்குள் இருக்கும் வசதிகளை மட்டுமே, அளிக்க முடியும். சிறை விதிமுறைகளை மதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுகிறீர்கள். தேவையின்றி தகராறு செய்யாமல் மவுனமாக இருங்கள்' என அறிவுறுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

