ஜம்மு காஷ்மீர் தேர்தல்; எதிர்க்கட்சிகளை சமாளிக்க பா.ஜ.,வின் மாஸ்டர் மூவ்.. மெகா திட்டம் போட்ட பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் தேர்தல்; எதிர்க்கட்சிகளை சமாளிக்க பா.ஜ.,வின் மாஸ்டர் மூவ்.. மெகா திட்டம் போட்ட பிரதமர் மோடி!
ADDED : செப் 15, 2024 10:30 PM

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ.,வுக்கான ஆதரவை அதிகரிக்கும் விதமாக, அம்மாநில பா.ஜ., மெகா திட்டத்தை தீட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்.,18, செப்., 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, அனைத்துக் கட்சிகளும் 2வது கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளர் ராம் மாதவ், பா.ஜ., பொதுச்செயலாளர் அசோக் கவுல், ஸ்ரீநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் அசோக் பட் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு, 19ம் தேதி பிரதமர் மோடியின் மெகா பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் தேர்தல் நெருங்கி வரும் முக்கியமான தருணத்தில், பிரதமர் மோடியின் பயணம் பா.ஜ.,வுக்கு கூடுதல் பலத்தை உண்டாக்கும். வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது தான் அவரது நோக்கம்.. ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.,வையும், பிரதமர் மோடியின் தலைமையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதன்மூலம், ஜம்மு காஷ்மீரில் பா.ஜ., ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது, எனக் கூறினர்.