ADDED : ஆக 17, 2024 07:46 PM
புதுடில்லி:ஜீன்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மத்திய டில்லி பாபா நகரில் வசிக்கும் ஜூக்னு, அமித், விக்கி, கரண் மற்றும் மோனு ஆகியோர் பிரசாத் நகரில் உள்ள ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாளை ஊழியர்கள்.
கடந்த 15ம் தேதி இரவு 5 பேருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மற்றம் நால்வரும் சேர்ந்து மோனுவை கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பினர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோனு, சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன் தினம் நான்கு பேரையும் கைது செய்தனர்.
கொலை நடந்த 2 மணி நேரத்துக்கு முன், மோனுவின் நண்பரான நீரஜ் மீது ஜுக்னு ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியது. இதையடுத்து ஏற்பட்ட தகராறில் மோனு கொல்லப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையான மோனு மீது ஏற்கனவே ஒரு தாக்குதல் வழக்கு நிலுவையில் உள்ளது.

