ADDED : ஜூன் 27, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதநாயகனஹள்ளி : பெங்களூரு, மாதநாயகனஹள்ளியின், லட்சுமிபுரத்தில், 'பதம் ஜுவல்லரி ஷாப்' உள்ளது. நேற்று முன் தினம் இரவு 9:30 மணியளவில், கடை திறந்திருந்தது. அப்போது மர்ம கும்பல் நகைக்கடையில் நுழைந்தது.
கடையில் இருந்த ஊழியர்கள், உரிமையாளரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டினர். ஷோகேசில் இருந்த தங்க நகைகளை பையில் நிரப்பி கொண்டு தப்பியோடிவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 60 லட்சம் ரூபாயாகும். தகவலறிந்து அங்கு வந்த மாதநாயகனஹள்ளி போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.