sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் கைதாகிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்

/

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் கைதாகிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் கைதாகிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் கைதாகிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்


ADDED : மே 13, 2024 02:23 AM

Google News

ADDED : மே 13, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி,: ஜார்க்கண்டில், அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனி செயலர் சஞ்சிவ் லால் தொடர்புடைய இடங்களில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஜார்க்கண்டில், முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திரா குமார் ராம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், வீரேந்திராவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருந்த தகவலின்படி, காங்கிரசைச் சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின், 70, தனி செயலர் சஞ்சிவ் லால் வீட்டில், அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இதே போல், சஞ்சிவ் லாலின் வேலைக்காரர் ஜஹாங்கிர் ஆலம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், அவரது வீட்டில் ஒரு அறையில் குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதில், 36 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சஞ்சிவ் லால், ஜஹாங்கிர் ஆலம் ஆகியோரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே, 'இந்த சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, அமைச்சர் ஆலம்கிர் ஆலம் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில், நாளை நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் ஆலம்கிர் ஆலமுக்கு நேற்று அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர். அவர் விசாரணைக்கு ஆஜராகும்போது கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us