என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்
என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்
ADDED : ஆக 18, 2024 06:37 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டத்தை ரத்து செய்த முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து
நாங்கள் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் வந்தாச்சு!
