ADDED : ஏப் 30, 2024 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி: ''ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா வழக்கினால், கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு எந்த இடையூறும் ஏற்படாது,'' என, பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
பிரஜ்வல் ரேவண்ணா, தனிப்பட்ட முறையில் தவறு செய்திருந்தால், அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கட்டும். தனிப்பட்ட முறையில் தவறு செய்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் அரசு உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கட்டும்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கால், கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கும் என, காங்கிரசார் அவப்பிரசாரம் செய்கின்றனர். ஆனால் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு, எந்த தொந்தரவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

