நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா பேச்சு
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா பேச்சு
ADDED : ஜூன் 29, 2024 12:35 PM

கோல்கட்டா: நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்து, நடந்த கருந்தரங்கில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மம்தா பேசியதாவது: நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது. மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை மக்களுடையது.
அரசியல் தலையீடு
மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன். யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொழில்நுட்பம்
கருந்தரங்கில் சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறை முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை வலுப்படுத்துவது பற்றி இந்த கருந்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது. நீதிபதிகளாக நாம் எதிர்கொள்ளும் சவால்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.