ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 % ஆக உயர்வு
ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 % ஆக உயர்வு
UPDATED : ஜூலை 12, 2024 08:55 PM
ADDED : ஜூலை 12, 2024 08:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே பணவீக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஜூன் மாத பணவீக்க சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.