44 நாட்களில் வெறும் 6 முறை தான்; ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்
44 நாட்களில் வெறும் 6 முறை தான்; ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்
UPDATED : செப் 16, 2024 03:07 PM
ADDED : செப் 16, 2024 11:51 AM

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் திருமணமான வெறும் 44 நாட்களில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் திகைத்து போயினர்.
ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனின் செயலால் அதிருப்தியடைந்து, போலீஸில் கணவன் தன்னை வரதட்சணை சித்ரவதை அளிப்பதாகவும், அதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார். அப்போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல.. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் என தெரிய வந்துள்ளது.
தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 44 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்து இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற போலீசார் அனுப்பி வைத்தனர்.

