ADDED : மே 16, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்யா சிந்தியா. இவரது தாய் மாதவி ராஜே சிந்தியா, 70, கடந்த மூன்று மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.
'வென்டிலேட்டர்' உதவியுடன் சுவாசித்து வந்த அவர் நேற்று காலை 9:28 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச்சடங்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவி ராஜே, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான மாதவ்ராவ் சிந்தியாவின் மனைவி. இவரது மறைவுக்கு பா.ஜ., மூத்த தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.