கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்
கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்
ADDED : ஜூலை 15, 2024 05:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைவளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். கல்வி போன்ற துறைகளில் காமராஜர் பங்களிப்பு ஈடு இணையற்றது.
அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மதிக்கத்தக்கது. அவருடைய லட்சியங்களை நிறைவேற்றி, நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.