இந்தியாவில் 1,300 தீவுகள் இருப்பது காங்,-க்கு தெரியாது ;பிரதமர்
இந்தியாவில் 1,300 தீவுகள் இருப்பது காங்,-க்கு தெரியாது ;பிரதமர்
UPDATED : மே 02, 2024 09:17 PM
ADDED : மே 02, 2024 09:13 PM

ஜூனாகத்: இந்தியாவில் 1,300 தீவுகள் உள்ளது. இது காங்.,க்கு தெரியாது. இவை அனைத்தும் செயற்கை கோள் உதவியுடன் தான் கண்டுபிடித்து உள்ளதாக பிரதமர் கூறி உள்ளார்.
குஜராத்தில் உள்ள ஜூனாகத் நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது: வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் அவசியமானது. எனது உத்தரவாதம் மற்றவர்களிடமிருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்திலிருந்து தொடங்குகிறது. சமூகத்தின் கடைசி நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான எனது உத்தரவாதம் என்றார்.
மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய பிரதமர், காங்., ஆட்சி காலத்தின் போது இந்தியாவில் எத்தனை தீவுகள் உள்ளன என்பது குறித்து அன்றைய மத்திய அரசுக்கு தெரியாது.
நான் ஒரு செயற்கை கோள் உதவியுடன் ஆராய்ச்சி செய்ததில் 1,300 தீவுகள் உள்ளன. அவற்றில் சில சிங்கப்பூர் அளவுக்கு பெரியது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

