ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது; திருப்பதி செல்லும் நெய் லோடு வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி!
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது; திருப்பதி செல்லும் நெய் லோடு வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி!
ADDED : செப் 22, 2024 07:49 AM

திருப்பதி; திருப்பதி லட்டு தயாரிப்புக்காக நெய் ஏற்றி வரும் வாகனங்கள் நடமாட்டத்தை கண்டறிய ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாக நந்தினி நிறுவனம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிய இவ்விவகாரம் எதிரொலியாக, கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பக்தர்கள் வேதனை அடைந்தனர். இனி லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டமைப்பின் பிரபல பிராண்டான நந்தினி நெய் பயன்படுத்தப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ் கூறி உள்ளதாவது; திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நந்தினி பிராண்ட் நெய் உபபோகப்படுத்தப்படுகிறது. நெய் கொண்டு செல்லும் வாகனங்கள் எங்கு நிற்கின்றன? எந்த வழியாக செல்கின்றன? என்பதை கண்டறிய வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. எந்த தருணத்திலும் கலப்படம் நடக்காமல் இருப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.