ADDED : மே 12, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சஞ்சய்நகர்: கே.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் சஞ்சய்நகரில் வசிக்கும் சிவகுமார், 35, கே.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது மனைவி சைத்ரா கவுடா, 28.
இவர், கர்நாடக உயர்நீதிமன்ற வக்கீலாக இருந்தார். தம்பதிக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார்.
சைத்ரா கவுடா, சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இவர் நேற்று காலை தன் அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என்பது தெரியவில்லை. தகவலறிந்து அங்கு வந்த சஞ்சய்நகர் போலீசார், உடலை மீட்டனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.