தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கெஜ்ரிவால் உதவியாளர் சிறையில் அடைப்பு

கெஜ்ரிவால் உதவியாளர் சிறையில் அடைப்பு

கெஜ்ரிவால் உதவியாளர் சிறையில் அடைப்பு


ADDED : மே 25, 2024 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை நான்கு நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 13ம் தேதி டில்லி முதல்வர் பங்களாவில் ஸ்வாதி மாலிவாலை, பிபவ் குமார் தாக்கியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, 18ம் தேதி கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை முதல் போலீஸ் காவலில் இருந்த குமார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குமாரை நான்கு நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us