ADDED : மே 30, 2024 07:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் வழக்கமான ஜாமின் கேட்டு, அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கெஜ்ரிவால் மனுதொடர்பாக பதில் மனுவை சனிக்கிழமைக்குள் (நாளை) தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தால், இடைக்கால ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கருதப்படுகிறது.