ரயிலில் சென்ற நக்சல் கமாண்டர் கைது செய்த கேரள போலீசார்
ரயிலில் சென்ற நக்சல் கமாண்டர் கைது செய்த கேரள போலீசார்
ADDED : ஜூலை 29, 2024 02:44 AM

பந்தலுார்: கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் முகாமிட்டு, நக்சல் அமைப்பின் நாடுகாணி பகுதியின் கமாண்டராக பணியாற்றி வந்தவர், வயநாடு பகுதியை சேர்ந்த சோமன்.
கண்ணுார் பகுதியை சேர்ந்த மனோஜ்; மலப்புரத்தை சேர்ந்த மொய்தீன்; தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகிய நக்சல்கள், வேறு இடத்துக்கு செல்ல திட்டமிட்டனர்.
கடந்த, 18-ம் தேதி எர்ணாகுளம் பகுதியில் மனோஜ், நக்சல் அமைப்புக்கு பணம் மற்றும் பொருள் உதவி கொடுத்து வந்த பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, சோமன் மற்றும் சந்தோஷ் இருவரும் தமிழக பகுதிக்குள் தப்பி சென்றதும், மொய்தீன் வயநாடு பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சோமன் மற்றும் சந்தோஷ் இருவரும் ஈரோடு ரயில் நிலையத்தில் நடந்து சென்றது தெரியவந்தது.
இதனை அறிந்த சோமன், கேரளா மாநிலம் கொச்சின் செல்வதற்காக ரயிலில் பயணித்துள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், சொர்ணுார் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு சோமனை கைது செய்தனர்.

