ADDED : ஆக 02, 2024 12:21 AM

மூணாறு:நாட்டில் நிலச்சரிவு அபாயம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளா 6 வது இடத்தில் உள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட நிலச்சரிவு பட்டியல் கொண்ட வரைபடத்தில் இந்தியாவில் 19 மாநிலங்களில் கேரளா 6வது இடத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், மிஜோரம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. அந்த மாநிலங்களில் மழையால் நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் இறப்பு சதவீதம் மிக குறைவு. ஆனால் கேரளாவில் நிலச்சரிவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கு அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதாக இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.
நாட்டில் 4.2 லட்சம் சதுர கி.மீ., நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் சதுர கி.மீ., மிகவும் ஆபத்தானவை. கேரளாவில் ஆலப்புழா தவிர மற்ற 13 மாவட்டங்களும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகும்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழையின் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூலை, ஆகஸ்டில் கூடுதலாக நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக புள்ளி விபரம் மூலம் தெரியவந்தது. மாநிலத்தில் 1961ல் ஜூலை 5ல் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மிகவும் அதிகமாக 73 பேர் பலியாகினர். அதன்பிறகு மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக.6 இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் இறந்தனர். அன்று தொழிலாளர்கள் வசித்த நான்கு வரிசை வீடுகளைக் கொண்ட கட்டடங்கள் உட்பட ஏழு கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத அளவில் சேதமடைந்தன.
----
மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள்: (அட்டவணை)
ஆண்டு/ மாவட்டம் / பலி எண்ணிக்கை
1961/ ஜூலை 5/ அட்டப்பாடி, பாலக்காடு/ - 73
1968/ ஜூலை 13/கயன்னா, கோழிக்கோடு/ - 9
1975/ நவ.2 /தேவர்மலை, கோழிக்கோடு/ - 8
1976/ ஜூலை 24/ வலக்காவு, திருச்சூர் /- 16
1977/ நவ.9/பாலக்காடு -/ 15
1978 /ஜூலை 11/ ஆனக்காம்போயில், கோழிக்கோடு/ - 4
1984/ ஜூன் 15/ புதுப்பாடி, வயநாடு /- 8
1984 /ஜூலை 2 /மேப்பாடி, வயநாடு -/ 18
1984 /அக்.8, 9/ கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்கள்/ 17
1992 /ஜூன் 19/ வயநாடு - /11
2001 /நவ.9 /அம்பூரி, திருவனந்தபுரம் /- 38
2004/ ஆக.4/ குற்றியாடி, கோழிக்கோடு/ - 10
2012 /ஆக.6/ ஆனக்காம்போயில், கோழிக்கோடு/ - 8
2012 /ஆக.18/ பைங்காட்டூர், எர்ணாகுளம்- /6
2018 /ஆக.14/ கட்டிப்பாறை, கோழிக்கோடு /- 7
2018 /ஆக.16 /போத்துண்டி, பாலக்காடு /- 7
2019 /ஆக.8 /புத்துமலை, வயநாடு /- 17
2019 /ஆக.8 /கவளப்பாறை மலப்புரம் /- 59
இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள்:
1949 /ஆக.28/ தொடுபுழா கருமல்லூர் /- 9
1958/ ஆக./ மூணாறில் -/13
1958 /ஆக.7/ தொடுபுழா குட்டிக்கல் /- 29
1974 /ஜூலை 26/ அடிமாலி /- 33
1985 /ஜூன் 26, 27 /மாவட்டத்தின் பல பகுதிகள்/ - 55
1989 /ஜூன் 27/ அடிமாலி கூம்பன் பாறை/ - 9
1989 /ஜூன் 28 /மூலமற்றம் நடுகாணி/ - 9
1989 /ஜூலை 23/ கட்டப்பனை குந்தளம்பாறை /- 5
1992 /நவ.14 /நெடுங்கண்டம் பாலாறு/ - 5
1994 /ஜூலை 14 /பைசன்வாலி/ - 7
1997 /ஜூலை 21 /அடிமாலி பழம்பிள்ளி சால்/ - 16
2005 /ஜூலை 25, 26 /மூணாறில் /- 8
2018 /ஆக.8 /அடிமாலி -/ 5
2018 /ஆக.15/ செருதோணி காந்திநகர்/ - 6
2018 /ஆக.16 /இடுக்கி கொன்னத்தடி -/ 7
2018 /ஆக.16/ இடுக்கி கொக்கையாறு /- 7
2018 /ஆக.17 /இடுக்கி உப்புத்தோடு - /4
2020 /ஆக.6 /ராஜமலை பெட்டிமுடி/ - 70
2021 /அக்.16 /கொக்கையாறு /- 7
2020 /ஆக.29/ குடையத்தூர் /- 5
இவை அனைத்தையும் மிஞ்சும் அளவில் சிலநாட்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.