பெண் டாக்டர் கொலையில் நாடே அதிர்ந்தது: நள்ளிரவிலும் தொடருது போராட்டம்
பெண் டாக்டர் கொலையில் நாடே அதிர்ந்தது: நள்ளிரவிலும் தொடருது போராட்டம்
UPDATED : ஆக 15, 2024 08:05 AM
ADDED : ஆக 15, 2024 01:03 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கூட்டு பலாத்காரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், டில்லி உள்பட நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் நள்ளிரவை தாண்டியுமு் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
![]() |
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
![]() |
இந்த சம்பவம் தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ., கையில் எடுத்து விசாரணையில் இறங்கியுள்ளது.
![]() |
இந்நிலையில் டில்லி, கோல்கட்டா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நள்ளிரவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பதாகைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டும், மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.
![]() |
![]() |
விசாரணை துவக்கம்
@@su
btitle@@


சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையைதுவக்கினர். பெண் டாக்டர் உயிரிழந்த மருத்துவ மனையில், அவர் உடல் இருந்த கூட்ட அரங்கை ஆய்வு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவருடன் பணியாற்றிய டாக்டர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.