கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர்?
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர்?
ADDED : ஆக 15, 2024 01:17 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி டாக்டர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகி இருப்பதாக பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் மகளின் உதடு, கழுத்து உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் மனித பற்கள் கடித்ததற்கான தடயங்கள் இருப்பது, உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளன. தலையில் காயங்கள் உள்ளன.
அதேபோல், அவரின் உடலில் 150 மி.கி., விந்துக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, கண்டிப்பாக எங்கள் மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை நேற்று துவக்கினர். பெண் டாக்டர் உயிரிழந்த மருத்துவமனையில், அவர் உடல் இருந்த கூட்ட அரங்கை ஆய்வு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவருடன் பணியாற்றிய டாக்டர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.