ADDED : ஜூன் 01, 2024 04:31 AM
பெங்களூரு, : கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர், தற்கொலை செய்து கொண்டார்.
தாவணகெரே, சென்னகிரியின் சந்தேபென்னுாரில் வசித்தவர் கவுடர், 48. இவர் கர்நாடக கிராம அடிப்படை வசதிகள் வளர்ச்சி ஆணையத்தின் ஒப்பந்ததாரராக இருந்தார்.
இவர் சந்தேபென்னுாரின், விவசாயத்துறை அலுவலக வளாகத்தில், 2023ல் பணிகளை மேற்கொண்டார். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டிருந்தார். ஆனால் பில் தொகையை கொடுக்காமல், அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதனால் கவுடர் நெருக்கடியில் சிக்கினார்.
இதற்கிடையில் அவரது இரண்டு சகோதரர்கள், பண விஷயத்தில் மோசடி செய்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம், சகோதரர்களின் செயலால் விரக்தி அடைந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, இவர் எழுதி வைத்த கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சந்தேபென்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

