தங்கவயலில் கே.எஸ்.ஆர்.பி., படை ஏற்படுத்த இடம் தேர்வு
தங்கவயலில் கே.எஸ்.ஆர்.பி., படை ஏற்படுத்த இடம் தேர்வு
ADDED : மே 09, 2024 06:43 AM

தங்கவயல்: தங்கவயலில்கே.எஸ்.ஆர்.பி., என்ற கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் படையின்ஒரு பிரிவை ஏற்படுத்தநேற்று இடத்தேர்வு நடந்தது.
கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு எஸ்.பி., அலுவலகம் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், கோலார் மாவட்டத்தில் மட்டும் கோலார், தங்கவயல் என, இரண்டு போலீஸ் மாவட்டங்கள் உள்ளன.
தங்கவயல் சிறப்பு போலீஸ் மாவட்டமாக 100 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் பெமல்நகர், உரிகம், மாரி குப்பம், ஆண்டர்சன் பேட்டை, ராபர்ட்சன் பேட்டை, பேத்த மங்களா, கேசம்பள்ளி,பங்கார்பேட்டை, பூதி கோட்டைஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இவற்றுடன் டி.ஏ.ஆர்., என்ற ஆயுதப்படை பிரிவும், சைபர் கிரைம் போலீஸ் நிலையமும் உள்ளன. இந்நிலையில், தங்கவயலில் புதியதாக கே.எஸ்.ஆர்.பி., என்றகர்நாடக மாநில ரயில்வே போலீஸ் படை பிரிவு ஒன்று அமைய உள்ளது.
இதற்காக இடத்தைத் தேர்வு செய்யகோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, எஸ்.பி., சாந்தாராஜு, தாசில்தார் ராமலட்சுமையா, நகராட்சி ஆணையர் பவன் குமார் ஆகியோர் உரிகம் பகுதியில் பார்வையிட்டு இடத்தைத் தேர்வு செய்தனர்.