குமாரசாமிக்கு இதய கோளாறு காங்., - எம்.எல்.ஏ., கிண்டல்
குமாரசாமிக்கு இதய கோளாறு காங்., - எம்.எல்.ஏ., கிண்டல்
ADDED : மார் 31, 2024 04:55 AM

பெங்களூரு, : ''ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், குமாரசாமிக்கு இதய கோளாறு வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். டிஸ்சார்ஜ் ஆன பின், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது எப்படி என்று எனக்கு புரியவில்லை?'' என, ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா கூறினார்.
இதய கோளாறு காரணமாக சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் குமாரசாமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, கட்சிக் கூட்டணி வேட்பாளர் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மலவள்ளியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், ஸ்ரீரங்கபட்டணா எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா பேசியதாவது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி, தேர்தல் இல்லாத நேரத்தில் இயல்பாகவே உள்ளார். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அவருக்கு இதய கோளாறு வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆன பின், மாநிலம் முழுதும் சுற்றி வருகிறார். இது எப்படி என்று எனக்கு புரியவில்லை. நாமாக இருந்தால் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஓய்வில் இருப்போம். குமாரசாமியின் இந்த 'டெக்னிக்' எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

