sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

l பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு சி.பி.ஐ.,யிடம்... l ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி கோரிக்கை l விசாரணையில் சிவகுமார் தலையீடு எனவும் புகார்

/

l பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு சி.பி.ஐ.,யிடம்... l ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி கோரிக்கை l விசாரணையில் சிவகுமார் தலையீடு எனவும் புகார்

l பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு சி.பி.ஐ.,யிடம்... l ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி கோரிக்கை l விசாரணையில் சிவகுமார் தலையீடு எனவும் புகார்

l பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு சி.பி.ஐ.,யிடம்... l ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி கோரிக்கை l விசாரணையில் சிவகுமார் தலையீடு எனவும் புகார்


ADDED : மே 07, 2024 11:12 PM

Google News

ADDED : மே 07, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, கர்நாடக அரசை, ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், துணை முதல்வர் சிவகுமார் தலையீடு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். சிவகுமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஹாசன் ம.ஜ.த., - எம்.பி.,யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் தொடர்பான சில ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. இதனால் கட்சியில் இருந்து, பிரஜ்வல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். தற்போது வெளிநாட்டில் உள்ளார். பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, வக்கீலும், பா.ஜ., பிரமுகர் தேவராஜ்கவுடா நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

* 25,000 பென் டிரைவ்

இதையடுத்து, பெங்களூரில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நேற்று அளித்த பேட்டி:

கடந்த சில தினங்களாக மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஆபாச வீடியோ வழக்கு மிகவும் மோசமானது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதி நடந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, பென்டிரைவ் வினியோகம் செய்யப்பட்டது. ஹாசனில் மட்டும் இல்லை, பெங்களூரு ரூரலில் வெளியிட்டு உள்ளனர்.

இதற்காக 25,000 பென்டிரைவ்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம் 22ம் தேதி, எங்கள் கட்சியின் தேர்தல் முகவர் பூர்ணசந்திரா என்பவர், 'பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியிட, சில மணி நேரமே உள்ளது' என்று, காங்கிரஸ் பிரமுகர் அரேஹள்ளி நவீன்கவுடா முகநுால் பக்கத்தில் பதிவிட்டது பற்றி, புகார் அளித்தார். ஆனால் இதுவரை நவீன்கவுடா மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பென்டிரைவை பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடாவிடம் கொடுத்தாக கூறிய டிரைவர் கார்த்திக்கை ஏன் இன்னும், கைது செய்யவில்லை.

* மேடை பகிர்வு

இந்த வழக்கில் தொடர்புடையவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பெண்கள் மானத்தை தெருவில் ஏலம் விட்டவர்களுக்கு என்ன தண்டனை. தேர்தல் பிரசாரத்தின் போது ம.ஜ.த., மூன்று தொகுதிகளிலும், பெங்களூரு ரூரலில் டாக்டர் மஞ்சுநாத் தோற்பார் என்றும், முதல்வர் சித்தராமையா அடிக்கடி கூறினார். பென்டிரைவ் கையில் இருக்கும் நம்பிக்கையில் தான், அவர் அப்படி பேசினாரா?

துப்பாக்கி முனையில் பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் பெண் கவுன்சிலர் புகார் அளித்தார். ஆனால் பலாத்காரம் நடந்த பின்னரும், பிரஜ்வலுடன், அந்த பெண் கவுன்சிலர் மேடையை பகிர்ந்து கொண்டார். இப்போது புகார் அளித்திருப்பது ஏன்.

அந்த பெண் சிறப்பு புலனாய்வு குழுவிடம், ரகசியமாக புகார் அளித்து உள்ளார். அப்படி இருந்தும் வெளியே கசிந்தது எப்படி. ரேவண்ணா மீது இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால், அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* ராகுலிடம் விசாரணை

பிரஜ்வல் வீடியோ வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, தேவராஜ் கவுடா கூறி உள்ளார். இதனால் சிவகுமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லா விட்டால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, இப்போது சித்தராமையா, சிவகுமார் விசாரணை குழுவாக செயல்படுகிறது. அதிகாரிகளால் சுதந்திரமான விசாரணை நடத்த முடியவில்லை. இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. இதுபற்றி கவர்னரிடம் புகார் அளிப்போம்.

பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்ததாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகிறார். அவருக்கு இந்த வழக்கு பற்றி ஏதோ தெரிந்து உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். 16 வயது சிறுமியும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி உள்ளார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு இன்னும் விசாரிக்காமல் இருப்பது ஏன். பென்டிரைவை வெளியிட்டு மாநிலத்தின், மானத்தை கெடுத்தவர்கள் காங்கிரசார்.

ஆனால் இந்த வழக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தேவையின்றி இழுக்கின்றனர். நாங்கள் கூட்டணி சேர்ந்ததை, உங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எங்களை கூட்டணியில் வைத்திருக்க வேண்டுமா என்று, முடிவு செய்ய வேண்டியது பா.ஜ., மேலிடம். அவர்கள் தேசிய கட்சி. என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

* ராஜினாமா செய்வேன்

இதற்கிடையில், தேவராஜ் கவுடா குற்றச்சாட்டு குறித்து, ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேல் நேற்று அளித்த பேட்டி:

எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கில், பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா பேசுவது அனைத்தும் பொய். முதல்வர், துணை முதல்வர் மற்றும் என் மீதும் குற்றச்சாட்டு கூறுகிறார். பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடம், நான் பேரம் பேசியதாக கூறுகிறார்.

இதற்கு உரிய ஆதாரங்களை தந்து, இந்த வழக்கில் எனக்கு தொடர்பு உள்ளது என்று, தேவராஜ் கவுடா நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவது பற்றி, எனது வக்கீலுடன் ஆலோசிப்பேன்.

என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால், நான் எம்.பி., ஆனாலும் எனது பதவியை, ராஜினாமா செய்கிறேன். இந்த வழக்கை தேவராஜ் கவுடா திசை திருப்ப பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார். பெண்களுக்கு அநீதி நடந்து உள்ளது. ஒரு வக்கீலாக இருந்து, அவர் நியாயம் வாங்கி தர வேண்டும். ஆனால், அவர் நடத்தை வேறு மாதிரியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

* 196 நாடுகள்

இந்நிலையில் பிரஜ்வல் வழக்கில் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, தேவராஜ் கவுடா கூறியதால், சிவகுமாரை கைது செய்ய கோரி, பெங்களூரு, ஹாசனில் ம.ஜ.த., தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சிவகுமார் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.

இத்தனைக்கும் மத்தியில் வெளிநாட்டில் இருந்து, பிரஜ்வல் இன்னும் வரவில்லை. பிரஜ்வலின் இருப்பிடம் பற்றி அறிய, இன்டர்போலுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதி இருந்தது. அந்த கடிதத்திற்கு நேற்று இரவு, பதில் கிடைத்து உள்ளது. பிரஜ்வல் இருப்பிடத்தை பற்றி அறியவும், அவரை கண்காணிக்கவும் 196 நாடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, இன்டர்போல் பதில் அளித்து உள்ளது.

===========

பாக்ஸ்

ரேவண்ணாவுக்கு

உடல்நல குறைவு

பெண் கடத்தல் வழக்கில், பிரஜ்வலின் தந்தையும், எம்.எல்.ஏ.,வுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தங்கள் காவலில் வைத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. ஜாமின் கேட்டு நேற்று முன்தினம், ரேவண்ணாவின் வக்கீல் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு ரேவண்ணாவுக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us