ADDED : செப் 01, 2024 12:14 AM
சண்டிகர்: ஹரியானா மாநிலம் சர்க்கி தாத்ரி மாவட்டத்தின் பாந்த்ரா கிராமத்தில் உள்ள குடிசையில் வசித்து வந்தவர் சபீர் மாலிக். மேற்கு வங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள இவர், பழைய பொருட்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி மாலிக் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் அடைந்த பசு காவலர்கள் சிலர், கடையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை தருவதாகக் கூறி அழைத்து சென்று சரமாரியாக அவரை தாக்கினர். இதில் மாலிக் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம் கல்யாணிலும், ரயிலில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறி, முதியவர் ஒருவரை சிலர் அடித்து துன்புறுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.