ADDED : மே 17, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரின் தொட்ட பொம்மசந்திரா ஏரி வளாகத்தில் உள்ள அரசு இடம், ஏரிக்கரை சாலையில் இரவு நேரத்தில் டிராக்டர்களில் கட்டட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாழாவதுடன், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தா, தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான குழுவினர், நேற்று மாலை தொட்ட பொம்மசந்திரா ஏரி வளாகத்தை ஆய்வு செய்தனர்.
திடக்கழிவுகள் நிர்வகிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை அளிக்கும்படி மாநகராட்சிக்கு நீதிபதி பி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டார்.

