ADDED : மே 02, 2024 06:32 AM

பெலகாவி: முதல்வர் சித்தராமையா அரசை விமர்சிக்க, கோகாக் எம்.எல்.ஏ.,வுக்கு தகுதி இல்லை,” என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் சாடினார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையாவை, மாநில மக்கள், 'அன்ன ராமையா' என, அன்புடன் அழைக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர் உட்பட கீழ் வர்க்கத்து சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் தலைவர்.
தேவராஜ் அர்சுக்கு பின், அனைத்து பிரிவுகளின் நலனுக்காகவும், இவர்களின் வாழ்க்கையை தரம் உயர்த்த யாராவது பாடுபட்டனர் என்றால், அது சித்தராமையா மட்டுமே.
லோக்சபா தேர்தலுக்கு பின், காங்கிரஸ் அரசு கவிழும் என, கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார். சித்தராமையா அரசு கவிழும் என, ரமேஷ் ஜார்கிஹோளி அவ்வப்போது கூறுகிறார். இவருக்கு சித்தராமையா அரசை பற்றி பேச, எந்த அருகதையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

