பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
ADDED : டிச 14, 2024 11:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக, இன்று (டிச.,14) டில்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்' என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.