மிசோரமில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தது ரயில் நிலையம்
மிசோரமில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தது ரயில் நிலையம்
ADDED : ஆக 30, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஸ்வால்: திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால், புதிதாக கட்டிய ரயில் நிலையம் இடிந்து மண்ணில் புதைந்த சம்பவம் மிசோரமில் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இங்கு கவன்புயி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது .இதில் கவன்புயி நகரில் புதிதாக ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் ரயில் நிலையம் கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தது. இதன் வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலச்சரிவால் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை.நிலச்சரிவை அடுத்து கவன்புயி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.