தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசம்: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசம்: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 15, 2024 01:43 PM

புதுடில்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்த்துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். இது திமுக அரசு மற்றும் போலீசாரின் ஒட்டுமொத்த தோல்வியைக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தி.மு.க.வினரே ஈடுபட்டுள்ளனர். இதனை போலீசார் மறைக்க முயற்சி செய்கின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரி வருகிறோம். இந்த வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வர அவர்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.