ADDED : ஜூன் 19, 2024 01:58 AM
புதுடில்லி:டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ராம்வீர் சிங் பிதுரி, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
பதர்பூர் சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான ராம்வீர் சிங் பிதுரி, டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தெற்கு டில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, பதர்பூர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலிடம் நேற்று வழங்கினார்.
சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிதுரி நன்றி தெரிவித்தார்.
பிதுரி ராஜினாமா செய்ததையடுத்து டில்லி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை ஏழு ஆக குறைந்தது. அடுத்து நடக்கும் கூட்டத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.