ADDED : மே 09, 2024 02:29 AM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வெப்பநிலை, 38.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட சற்று குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் ஈரப்பதம் 46 சதவீதம் முதல் 62 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.
நேற்று முன் தினம் டில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச நிலை. ஆனால், நேற்று நான்கு டிகிரிகள் குறைந்துள்ளது.
டில்லி வானிலை ஆய்வு மைய இயக்குனர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா, “கடந்த ஆண்டைப் போலவே வெப்பநிலை நீடிக்கும். வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லேசான தூறலுக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பலத்த காற்றை எதிர்பார்க்கலாம். இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம்,”என்றார்.
காற்றின் தரக் குறியீடு 225 ஆக இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியம் கூறியுள்ளது.