ADDED : ஆக 01, 2024 12:30 AM
பெலகாவி : கள்ளக்காதலை கண்டித்த கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெலகாவி, முதலகி வதேரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ஜெகமுட்டி, 35. இவரது மனைவி சித்தவ்வா, 33. சங்கரின் நண்பர் ஸ்ரீதர், 34. சங்கர் வீட்டிற்கு ஸ்ரீதர் அடிக்கடி சென்றார்.
அப்போது அவருக்கும், சித்தவ்வாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர்.
இதுபற்றி அறிந்த சங்கர், மனைவி, நண்பரை கண்டித்தார். ஆனால், அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் மனைவியை சங்கர் தாக்கினார். கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று நினைத்த சித்தவ்வா கணவரை கொலை செய்ய முடிவு எடுத்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி சங்கரை அரிவாளால் வெட்டி சித்தவ்வா, ஸ்ரீதர் கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பெலகாவி 12வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தாரகேஸ்வர கவுடா பாட்டீல் தீர்ப்பு கூறினார்.
சித்தவ்வா, ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.