sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

படப்பிடிப்பில் லைட்மேன் பலி இயக்குனர் மீது வழக்கு 

/

படப்பிடிப்பில் லைட்மேன் பலி இயக்குனர் மீது வழக்கு 

படப்பிடிப்பில் லைட்மேன் பலி இயக்குனர் மீது வழக்கு 

படப்பிடிப்பில் லைட்மேன் பலி இயக்குனர் மீது வழக்கு 


ADDED : செப் 07, 2024 07:40 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதநாயக்கனஹள்ளி: கன்னட திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் யோகராஜ் பட். தற்போது 'மானாட கடலு' என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி இரவு, பெங்களூரு அருகே அடகமாரனஹள்ளியில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அதற்கான போடப்பட்டு இருந்த விளக்குகளை, லைட்மேன் மோகன்குமார், 24, என்பவர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது 30 அடி உயரத்தில் இருந்து, தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை, படக்குழுவினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.

மோகன்குமார் சகோதரர் சிவராஜ் அளித்த புகாரில், இயக்குனர் யோகராஜ் பட், படத்தின் மேலாளர் சுரேஷ், உதவி மேலாளர் மனோகர், அடகமாரனஹள்ளியின் கிருஷ்ணப்பா ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவாகிஉள்ளது.






      Dinamalar
      Follow us