கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு
கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு
ADDED : செப் 10, 2024 11:14 PM

புதுடில்லி:சிறு, குறு நிறுவனங்கள் பயனடையும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத நிதியை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டில்லியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கூடுதல் செயலர் ரஜ்னீஷ் கூறியதாவது:
சிறுதொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை வாயிலாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதை, மேலும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 22 ஆண்டுகளில், சிறுதொழில் கடன் உத்தரவாத நிதியாக 2.60 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும், அதைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

