UPDATED : ஜூன் 20, 2024 08:43 PM
ADDED : ஜூன் 20, 2024 08:26 PM

புதுடில்லி: பார்லிமென்ட் தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாம் முறையாக கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின், கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் நாற்காலிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற புதிய லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்வதற்காக வரும் 24-ம் தேதி சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குகிறது. 26-ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இன்று வெளியான தகவலில் லோக்சபா தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். ஒடிசா மாநில பா.ஜ. எம்.பியான இவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.