ADDED : ஏப் 03, 2024 07:40 AM

விஜயபுரா : ''என்னை பார்த்து யாரும் ஓட்டு போட வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள்,'' என விஜயபுரா பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி வழங்கிய நிதியால் தான், இத்தொகுதி வளர்ச்சி அடைந்தது. எனவே என்னை பார்த்து யாரும் ஓட்டு போட வேண்டாம். மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள். எப்போதெல்லாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, தனது கடைசி காலத்தில், அரசியலில் பா.ஜ.,வுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று அப்போதே கூறினார். அவரின் கூற்று உண்மையானது. அவருக்கு பின், நானாக பா.ஜ.,வில் இணைந்தேன்.
விஜயபுரா தொகுதி வளர்ச்சிக்கு பிரதமர், அமைச்சர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

