ADDED : ஆக 01, 2024 11:03 PM
குடகு: முதல்வர் சித்தராமையா, மடிகேரியில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்பு பகுதிகளை, இன்று ஆய்வு செய்கிறார்.
குடகு மாவட்டத்தில், பரவலாக கனமழை பெய்கிறது. பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மடிகேரியிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது.
பலர் வீடுகள், பொருட்களை இழந்துள்ளனர். மழை சேதங்களை பார்வையிட, முதல்வர் சித்தராமையா இன்று மடிகேரி செல்கிறார்.
இன்று காலை 11:30 மணிக்கு, பொன்னம்பேட்டின், ஸ்ரீமங்களா ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தையும், மதியம் 12:45 மணிக்கு, விராஜ்பேட்டின், கெதமள்ளூர் கிராமத்தின் அருகில், நிலச்சரிவு பகுதியையும் பார்வையிடுவார்.
மதியம் 1:45 மணிக்கு சித்தபுராவின், ஸ்வர்ண மாலா திருமண மண்டபத்தில் உள்ள மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிவார்.
அதன்பின் மடிகேரி நகரின், சுதர்ஷனா விருந்தினர் இல்லத்தில், ஊடக சந்திப்பு நடத்துகிறார்.
மாலை 4:30 மணிக்கு, குஷால்நகரின், மாதாபட்டணா கிராமத்துக்கு சென்று, வீடுகள் இடிந்துள்ள பகுதிகளுக்கு சென்று, ஆய்வு செய்கிறார்.