sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

/

மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

27


UPDATED : ஆக 31, 2024 01:18 PM

ADDED : ஆக 31, 2024 12:59 PM

Google News

UPDATED : ஆக 31, 2024 01:18 PM ADDED : ஆக 31, 2024 12:59 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எழும்பூர்- நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் எந்தெந்த இடங்களில் நின்று செல்லும் மற்றும் கட்டணம் விபரங்கள் பின்வருமாறு:

எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்

* சென்னை - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.

* மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.

மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்

* மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு, நாமக்கல், 9:15க்கு, சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.

* மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.

கட்டண விபரங்கள்


* எழும்பூர் - தாம்பரம் (சேர்கார்- ரூ.380, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.705),

* எழும்பூர் - விழுப்புரம் (சேர்கார்- ரூ.545, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,055),

* எழும்பூர் - திருச்சி (சேர்கார்- ரூ.955, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,790),

* எழும்பூர் - திண்டுக்கல் (சேர்கார்- ரூ.1,105, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,110),

* எழும்பூர் - மதுரை (சேர்கார்- ரூ.1,200, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,295),

* எழும்பூர் - கோவில்பட்டி (சேர்கார்- ரூ.1,350, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,620),

* எழும்பூர் - நெல்லை (சேர்கார்- ரூ.1,665, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,055),

* எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார்- ரூ.1,760, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,240),

* நாகர்கோவில் - நெல்லை (சேர்கார்- ரூ.440, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.830),

* நாகர்கோவில் - கோவில்பட்டி (சேர்கார்- ரூ.515, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.985),

* நாகர்கோவில் - மதுரை (சேர்கார்- ரூ.735, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,405),

* நாகர்கோவில் - திண்டுக்கல் (சேர்கார்- ரூ.850, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,635),

* நாகர்கோவில் - திருச்சி (சேர்கார்- ரூ.1,000, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,945),

* நாகர்கோவில் - விழுப்புரம் (சேர்கார்- ரூ.1,510, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,775)

* நாகர்கோவில் - தாம்பரம் (சேர்கார்- ரூ.1,700, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,175)

* நாகர்கோவில் - எழும்பூர் (சேர்கார்- ரூ.1,735, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,220)

வந்தே பாரத்தில் படுக்கை வசதி

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே பாரத் ரயில் சேவையால் தொழில்கள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழகத்தின் கோவில் நகரான மதுரையும், ஐ.டி., நகரான பெங்களூரையும் புதிய சேவை இணைக்கிறது. விரைவில் படுக்கை வசதி, புதிய வழித்தடங்கள், ரயில் சேவைகள் உருவாக்கப்படும்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும். தமிழகத்தில் ஏற்கனவே 6 வந்தே பாரத் ரயில்களுடன் தற்போது 2 புதிய வந்தே ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில்கள் நின்று செல்லும் வகையில் சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us