ADDED : மார் 10, 2025 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ண சுவாமி கோவிலின் புனர வர்த்தனா மஹா கும்பாபிஷேகம் நேற்று பக்தி பரவசத்துடன் நடந்தது.
தங்கவயல் சாம்பியன் ரீப் ஐ பிளாக் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய சிலைகள் பிரதிஷ்டாபனை நடந்தது. புனரமைப்பு ஜீர்ணோத்தாரன விமான கோபுர மஹா கும்பாபிஷேகமும் நடந்தது.
இம்மாதம் 8ம் தேதி முதல் நேற்று வரை ஹோம பூஜைகள், வாஸ்து சாஸ்திரம், கலச பூஜைகள் நடந்தன. நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரம்ம ஸ்ரீ சங்கரன் குழுவினரின் தலைமையில் பூஜைகள் நடந்தன.