அமைச்சர்கள் தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைவு பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹாதேவபுரா
அமைச்சர்கள் தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைவு பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹாதேவபுரா
ADDED : ஏப் 29, 2024 06:00 AM

பெங்களூரு, : கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும், லோக்சபா தேர்தலில் பெங்களூரில் ஓட்டு சதவீதம், கடுமையாக குறைந்து உள்ளது.
கர்நாடகாவில் முதல்கட்டமாக 14 லோக்சபா தொகுதிகளுக்கு, கடந்த 26ம் தேதி தேர்தல் நடந்தது. நகர பகுதிகளை காட்டிலும் கிராமங்களில் அதிக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டு நடந்த சட்டபை தேர்தலை காட்டிலும், லோக்சபா தேர்தலில், பெங்களூரில் ஓட்டு சதவீதம் கடுமையாக குறைந்து உள்ளது.
ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது பதிவாகி உள்ள, ஓட்டு விபரம் பின்வருமாறு:
பெங்களூரு சென்ட்ரல்
l சி.வி.ராமன் நகர் சட்டசபை தொகுதியில் சட்டசபை தேர்தலில் 49.63 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தற்போது லோக்சபா தேர்தலில் 1.44 சதவீதம் குறைந்து 48.19 சதவீதம் பதிவாகி உள்ளது. சி.வி.ராமன் நகர் பா.ஜ., வசம் உள்ளது
l சாம்ராஜ்பேட்டில் சட்டசபை தேர்தலில் 54.27 சதவீதம்; லோக்சபா தேர்தலில் 54.82; பெரிய வித்தியாசம் இல்லை 0.55 சதவீதம் கூடுதல். இந்த தொகுதி எம்.எல்.ஏ., வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான்
l காந்தி நகரில் சட்டசபை தேர்தலில் 57.30; லோக்சபா தேர்தலில் 55.81; 1.49 சதவீதம் குறைவு. இந்த தொகுதி எம்.எல்.ஏ., சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ்
l மஹாதேவபுராவில் சட்டசபை தேர்தலில் 71.06; லோக்சபா தேர்தலில் 53.78; 17.28 சதவீதம் ஓட்டுகள் குறைந்து உள்ளது. இந்த தொகுதி பா.ஜ.,வசம் உள்ளது
l ராஜாஜி நகரில் சட்டசபை தேர்தலில் 56.94; லோக்சபா தேர்தலில் 55.63; 1.31 சதவீதம் ஓட்டுகள் குறைவு. இந்த தொகுதி பா.ஜ., வசம் உள்ளது
l சர்வக்ஞநகரில் சட்டசபை தேர்தலில் 58.18; லோக்சபா தேர்தலில் 54.80; 3.38 சதவீதம் ஓட்டுகள் குறைவு. இந்த தொகுதி எம்.எல்.ஏ., மின்சார அமைச்சர் ஜார்ஜ்
l சாந்தி நகரில் சட்டசபை தேர்தலில் 54.90; லோக்சபா தேர்தலில் 53.36; 1.54 சதவீதம் ஓட்டுகள் குறைவு. இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது
l சிவாஜி நகரில் சட்டசபை தேர்தலில் 59.91; லோக்சபா தேர்தலில் 57.61; 2.3 சதவீதம் ஓட்டுகள் குறைவு; இந்த தொகுதி காங்கிரசிடம் உள்ளது
மஹாதேவபுரா தொகுதியில் அதிக ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் 17.28 சதவீதம் ஓட்டுகள் குறைந்து இருப்பது தேசிய கட்சியினருக்கு, குறிப்பாக பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பிரதிநிதித்துவம் வகிக்கும் சாம்ராஜ்பேட்டில் மட்டும் மிக குறைந்த அளவில் ஓட்டு சதவீதம் கூடியுள்ளது. மற்ற இரண்டு அமைச்சர்கள் உள்ள தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.
பெங்களூரு வடக்கு
l பேட்ராயனபுராவில் சட்டசபை தேர்தலில் 57.84; லோக்சபா தேர்தலில் 56.93; 0.91 சதவீதம் குறைவு. இந்த தொகுதி எம்.எல்.ஏ., வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா
l தாசரஹள்ளியில் சட்டசபை தேர்தலில் 48.07; லோக்சபா தேர்தலில் 48.59; 0.52 சதவீதம் கூடுதல்; இந்த தொகுதி பா.ஜ., வசம் உள்ளது
l ஹெப்பாலில் சட்டசபை தேர்தலில் 55.07; லோக்சபா தேர்தலில் 54.08; 0.99 சதவீதம் குறைவு; இந்த தொகுதி எம்.எல்.ஏ., நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ்
l யஷ்வந்த்பூரில் சட்டசபை தேர்தலில் 63.44; லோக்சபா தேர்தலில் 59.56; 3.88 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ., வசம் உள்ளது
l கே.ஆர்.புரத்தில் சட்டசபை தேர்தலில் 52.68; லோக்சபா தேர்தலில் 51.36; 1.32 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ., வசம் உள்ளது
l மஹாலட்சுமி லே - அவுட்டில் சட்டசபை தேர்தலில் 54.25; லோக்சபா தேர்தலில் 53.37; 0.88 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ.,விடம் உள்ளது
l புலிகேசி நகரில் சட்டசபை தேர்தலில் 54.79; லோக்சபா தேர்தலில் 56.69; 1.90 சதவீதம் அதிகரிப்பு; இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது
l மல்லேஸ்வரத்தில் சட்டசபை தேர்தலில் 55.11; லோக்சபா தேர்தலில் 54; 1.11 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ.,விடம் உள்ளது
தாசரஹள்ளி, புலிகேசி நகரில் மட்டும் ஓட்டு சதவீதம் சற்று கூடியுள்ளது. இரு அமைச்சர்கள் தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைந்துஉள்ளது.
பெங்களூரு தெற்கு
l சிக்பேட்டில் சட்டசபை தேர்தலில் 58.24; லோக்சபா தேர்தலில் 58.03; 0.21 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ.,விடம் உள்ளது
l கோவிந்த்ராஜ் நகரில் சட்டசபை தேர்தலில் 55.67; லோக்சபா தேர்தலில் 52.78; 2.89 சதவீதம் குறைவு; இந்த தொகுதி காங்கிரசிடம் உள்ளது
l ஜெயநகரில் சட்டசபை தேர்தலில் 61.79; லோக்சபா தேர்தலில் 59; 2.79 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ., வசம் உள்ளது.
l பத்மநாப நகரில் சட்டசபை தேர்தலில் 57.35; லோக்சபா தேர்தலில் 58.17; 0.82 சதவீதம் கூடுதல்; இந்த தொகுதி எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் அசோக்
l பி.டி.எம்., லே - அவுட்டில் சட்டசபை தேர்தலில் 49.15; லோக்சபா தேர்தலில் 49.73; 0.58 சதவீதம் கூடுதல். இந்த தொகுதி எம்.எல்.ஏ., போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி
l பசவனகுடியில் சட்டசபை தேர்தலில் 54.61; லோக்சபா தேர்தலில் 55.10; 0.49 சதவீதம் கூடுதல்; இந்த தொகுதி பா.ஜ.,விடம் உள்ளது
l பொம்மனஹள்ளியில் சட்டசபை தேர்தலில் 49.50; லோக்சபா தேர்தலில் 47.55; 1.95 சதவீதம் குறைவு; இந்த தொகுதி பா.ஜ.,விடம் உள்ளது
l விஜய நகரில் சட்டசபை தேர்தலில் 51.96; லோக்சபா தேர்தலில் 51.45; 0.51 சதவீதம் குறைவு; இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அங்கம் வகிக்கும் தொகுதியிலும், ஒரு அமைச்சர், ஒரு எம்.எல்.ஏ., தொகுதியில் மிகக் குறைந்த அளவில் ஓட்டு சதவீதம் கூடியுள்ளது.
பெங்களூரு நகரில் ஆறு அமைச்சர்கள் உள்ள நிலையில் அமைச்சர் ஜமீர் அகமது கான், ராமலிங்கரெட்டி தொகுதியில் மட்டும் ஓட்டு சதவீதம் கூடியுள்ளது. மீதியுள்ள நான்கு அமைச்சர் தொகுதியிலும் குறைந்துள்ளது.

