சாமுண்டி மலையில் மகிஷா தசரா முன்னாள் எம்.பி., சிம்ஹா எதிர்ப்பு
சாமுண்டி மலையில் மகிஷா தசரா முன்னாள் எம்.பி., சிம்ஹா எதிர்ப்பு
ADDED : செப் 14, 2024 08:14 AM

மைசூரு: ''சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதிக்கமாட்டோம்,'' என, மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதிக்கமாட்டோம். எந்த கால கட்டத்திலும் சாமுண்டீஸ்வரியை அவமதிக்க அனுமதிக்க மாட்டேன்.
ஒருவரின் நிலைபாடு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. எனது நிலைப்பாடு மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
பிரார்த்தனை
மகிஷா தசராவை நடத்துவோர், தங்கள் வீடுகளில் செய்யட்டும். மகிஷாசூரனை போன்ற குழந்தைகளை பெற்று, தினமும் பிரார்த்தனை செய்தாலும், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
முஸ்லிம்களின் கைகளில் இருந்து பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களை அரசு பறிக்க வேண்டும். இல்லையெனில், இனி வரும் விநாயகர் சிலை ஊர்வலங்களில் நாங்கள் பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டி வரும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால், அதற்கு அரசே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலமாக கோலாகலமாக நடக்கிறது. முஸ்லிம்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், எங்களை பாதுகாத்துக் கொள்ள, எங்களுக்கு தெரியும்.
ஹிந்துக்கள் கைது
நாகமங்களாவில் அப்பாவி ஹிந்துக்கள் கைது செய்யப்பட்டால், மீண்டும் அங்கு வருவோம். போலீஸ் நிலையத்துக்கு வருவோம். ஊர்வலத்தை தடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலவரத்தை துவக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சரி. கலவரத்தை துவக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன அர்த்தம்? போலீசார் சுதந்திரமாக செயல்பட, அரசு அனுமதிக்கவில்லை.
தலிபான்கள், தங்கள் மனநிலைக்கு ஏற்ப போலீஸ் துறையை கட்டுப்படுத்துகின்றனர். அரசு எப்படி இருக்கிறதோ, அதுபோல தான் துறையும்.
ஆர்.எஸ்.எஸ்., மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நான் அங்கு தான் வளர்ந்தேன். எனது கல்வியில், ஆர்.எஸ்.எஸ்.,க்கு பெரும் பங்கு உள்ளது. அங்கு உள்ளவர்களிடம் நான் ஏன் அதிருப்தி தெரிவிக்க வேண்டும்?
இவ்வாறு அவர் கூறினார்.