ADDED : ஜூலை 05, 2024 11:16 PM

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக திரிணமுல் காங்., எம்.பி., மஹூவா மொய்த்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்
மேற்குவங்க மாநில ஆளும் திரிணமுல் காங்., எம்.பி. மஹூவா மொய்த்ரா, இவர் லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எம்.பி.யாகியுள்ளார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஹத்ராஸ் வந்தார். அப்போது அவரது உதவியாளர் குடை பிடித்துக் கொண்டிருந்தார். இதனை மஹூவா மொய்த்ரா தனது எக்ஸ் வலைதளத்தில், அவதூறாக கருத்து பதிவேற்றினார்.
இது குறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் மஹூவா மொய்த்ரா மீது லோக்சபா சபாநாயகருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். டில்லி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.