மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.,: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.,: மம்தா குற்றச்சாட்டு
ADDED : மே 04, 2024 05:03 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தை பா.ஜ., இழிவுபடுத்துகிறது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்யை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை. மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என இருவர் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சதித்திட்டம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பா.ஜ., சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும், மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயற்சி செய்யவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.