ADDED : மே 01, 2024 08:21 AM

மாண்டியா : மாண்டியாவை சேர்ந்த இளம்பெண், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்., பேட்டையை சேர்ந்தவர் ரபீந்திரநாத். இவர், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகள் திக் ஷிதா, 26. இவர், தமிழகம் கோவையில் உள்ள ஈஷா பவுண்டேஷனில் யோகா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இங்கு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த ஜான் வைடெல், 30. யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் நண்பர்களாக பழகினர்; நாளடைவில் காதலிக்க துவங்கினர். தங்களின் காதலை, இருவரின் வீட்டிலும் தெரிவித்தனர்; அவர்களும் சம்மதித்தனர்.
இதையடுத்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆசிர்வாதத்துடன், மாண்டியா கே.ஆர்., பேட்டையில் உள்ள நஞ்சம்ம முத்தே கவுடா சமுதாய பவனில், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது.
திக் ஷிதா கூறுகையில், ''எங்களின் திருமணத்துக்கு இருவரின் வீட்டினரும் சம்மதம் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் ஜான், கன்னடம் பயின்று வருகிறார். நான் ஸ்பெயின் மொழி பயின்று வருகிறேன்,'' என்றார்.