மாண்டியா பொறுப்பு என்னுடையது நிகில் குமாரசாமி உத்தரவாதம்
மாண்டியா பொறுப்பு என்னுடையது நிகில் குமாரசாமி உத்தரவாதம்
ADDED : ஜூன் 29, 2024 04:30 AM

பெங்களூரு: ''மாவட்ட மக்கள் ஆசிர்வாதம் செய்ததால், என் தந்தை குமாரசாமிக்கு மத்திய அரசு, மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது. மாண்டியா மாவட்டத்தின் பொறுப்பை, நான் ஏற்றுள்ளேன்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
என் தந்தை குமாரசாமிக்கு, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது. எனவே அவர், வாரம் இரண்டு முறை மட்டுமே, பெங்களூக்கு வருவார். அவர் மத்திய அமைச்சராவதற்கு, மாண்டியா மக்களே காரணம். எனவே மக்களின் பிரச்னைகளை கேட்டறிவது, என் பொறுப்பு.
மாவட்டத்தின், எந்த கிராமத்தினராக இருந்தாலும், தங்கள் பிரச்னைகளை எங்கள் கட்சி தலைவர்கள் மூலம், என் கவனத்துக்கு கொண்டு வந்தால், நான் உடனடியாக தீர்த்து வைப்பேன்.
குமாரசாமிக்கு மத்திய அரசு, மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது. மாண்டியா மாவட்டத்தின் பொறுப்பை, நான் ஏற்றுள்ளேன்.
மாவட்டத்தின், மத்துார் தாலுகா மக்கள், அதிக ஓட்டுகள் அளித்துள்ளனர். அனைத்து தாலுகாக்களிலும், மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். மக்களின் அன்பை மறக்க முடியாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், குமாரசாமிக்காக காத்திருக்க வேண்டாம். என்னிடம் கூறினால் நான் பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

