மங்களூரு - தர்மஸ்தலா 'சூப்பர் பாஸ்ட்' பஸ் இயக்கம்
மங்களூரு - தர்மஸ்தலா 'சூப்பர் பாஸ்ட்' பஸ் இயக்கம்
ADDED : மே 30, 2024 06:42 AM

மங்களூரு: மங்களூரில் இருந்து, தர்மஸ்தலாவுக்கு அதிவிரைவு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கே.எஸ்ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் வசதிக்காக, தட்சிண கன்னடாவின், மங்களூரில் இருந்து, பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவுக்கு, அதிவிரைவு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் விரைவில் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நான்கு பஸ்கள் இயக்கப்படும்.
மங்களூரின், பிஜையில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். பண்ட்வால், காரிஞ்சா கிராஸ், புஞ்சாலகட்டே, மடந்தியாரு, குருவாயனகெரே, பெல்தங்கடி, உஜிரே ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
மங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து, காலை 6:15, 6:40, 7:15, 10:00, 10:45, 11:35, 12:15, மாலை 4:30, 5:15, 6:00 மணி ஆகிய நேரங்களில் தர்மஸ்தலாவுக்கு பஸ்கள் புறப்படும்.
மங்களூரில் இருந்து காரிஞ்சா கிராசுக்கு, 51 ரூபாய், புஞ்சாலகட்டேவுக்கு 56 ரூபாய், குருவாயனகெரேவுக்கு 62 ரூபாய், பெல்தங்கடிக்கு 66 ரூபாய், உஜிரேவுக்கு 71 ரூபாய், தர்மஸ்தலாவுக்கு 86 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மங்களூரில், சாதாரண பஸ்கள் மட்டுமே இயங்கின. இவை ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று செல்லும். தற்போது சூப்பர் பாஸ்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அவசர நேரத்தில் தர்மஸ்தலாவுக்கு செல்ல, உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.